GRAAMIYA SAANGAMAM

மாட்டுலே அதென்னுங் நாட்டு மாடு ஊட்டு மாடு அப்பிடீன்னு அன்னைக்கெல்லா மாடு, எரும ரெண்டுதானுங். எப்போ இந்த சீமை மாடு வந்துதோ அப்பறந்தே நாட்டு மாடுன்னு தனியா பேரே வெச்சுட்டாங்
என்னுங் நம்மூரு மாட்டுக்கு ஒரு பாங்கும் இல்லீங்கிலே .நேரமிருந்தா உத்தி ஓரக்கால்ல நாலு வாயு மேய உடுவொ ஒரு புடி தட்டே போட்டு கழுனி தண்ணி கிண்ணி இருந்தா இத்தினி ஊத்துவொ இல்லீனாலு பச்ச தண்ணியே போதுமுங் .
அது வேட காலத்துக்குதே செழுப்பு காலத்துக்கு கொரையிலே மேயருதே போது என்னோ ஒழவு கிழவு ஓட்டாமெ இருந்தா நல்ல கறவ வருக்கமா இருந்தா நேர மூனு படி கறக்குமுங் .அது கொரையிலே மேயிலே பூடு செடி எல்லாந் திங்குதல்லுங் .அதுனால அந்த பால குடிக்கிற காள கன்னுகுட்டி சல்லிக்கட்டுக்கு போவுதுங் .
எருத்து மாடு வண்டி இழுக்குது ,ஒழவு ஓட்டுது ,கவலே ஓட்டுது சின்ன பண்ணையத்துலே பொட்ட மாடுதானுங் வேலைக்கு இருக்கு மாட்டுக்கு ஒரு நோவுமில்லே அந்த பால குடிக்கிரே கொழந்திக்கி நோவு நொடியில்லாமெ நல்ல தெம்பா இருக்கு ,தயிரும்மு நெய்யுமு மணமா ருசியா இருக்குதுங்
இந்த சீம மாடு பாருங் மிஷினாட்டோ எப்ப பாத்தாளு மனம்போல திங்கிதுங் .கலப்பு தீவனோ, புண்ணாக்கு ,தவுடு ,அப்பரோ இந்த பஞ்சு போடறாங் ,பால் செரக்கலீன்னா ஊசி போடறாங் மாடு செனே ஆவருத்துக்கு ஊசி போடறாங்.நல்ல பெரீ மாடு நேரொ பத்து படி பச்ச தண்ணியாட்ட கறக்குது ,அந்தொ பால்ல என்ன சத்து இருக்குது ஒரு கெரவுமில்லே .அதுனாலெதா இப்பொ அல்லா டாக்டரு நாட்டு மாட்டு பால் குடிக்க சொல்ராங்